முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதியின் அடுத்த கதாநாயகி யார்?

விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இணைந்து இருக்கிறார் நிஹாரிக்கா கோனிடேலா.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:03 AM
பகிர்:

விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இணைந்து இருக்கிறார் நிஹாரிக்கா கோனிடேலா. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தை 7 C's என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், அம்மே நாராயணா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது


அழகும், அறிவும் ஒருங்கே பெறுவது என்பது, எல்லா கதாநாயகிகளுக்கும்  ஒரு வரப்பிரசாதம். அப்படி அழகையும், அறிவையும் ஒருங்கே பெற்று,  தன்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம்  மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற கதாநாயகி நிஹாரிக்கா கோனிடேலா .  இவர் தற்போது, அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் நடித்து  வரும் புதிய  படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம், காதல் கலந்த கற்பனை கதைக்களத்தில், அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

'தன்னுடைய நடிப்பாற்றலால் இந்த கதாபாத்திரத்துக்கு உயிர் தர கூடிய ஒரு கதாநாயகியை நாங்கள் தேடி கொண்டு இருந்தோம். அப்போது  நிஹாரிக்காவின்  அசத்தலான  நடிப்பை  பற்றி  கேள்வி பட்ட நாங்கள், அடுத்த கணமே, அவர் தான் எங்கள் படத்தின் கதாநாயகி என்பதை  முடிவு செய்துவிட்டோம்'  என்று கூறுகிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.

முழு கட்டுரையைப் படிக்க →