முகப்பு
செய்திகள்

விவாகரத்து கோர நடிகை நந்திதா தாஸ் முடிவு! கணவர் மறுப்பு!

நந்திதா தாஸின் கணவர் இதை மறுத்துள்ளார். இருவரும் இப்போதும் ஒரே வீட்டில்தான் வாழ்கிறோம்...

Updated On : 3 ஜனவரி, 2017 at 3:30 PM
பகிர்:

2017-ன் முதல் பிரிவுச் செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை நந்திதா தாஸ், தனது கணவர் சுபோத் மஸ்கராவைப் பிரிய முடிவெடுத்துள்ளார். 

இவர்களுடைய 7 வருட திருமண வாழ்க்கையில் விஹான் என்கிற 6 வயது மகன் உண்டு. இதுகுறித்து ஒரு பேட்டியில் நந்திதா தாஸ் கூறியதாவது: ஆமாம். நாங்கள் பிரிவதாக வெளியான செய்திகள் உண்மையே. இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருவருக்குமே எங்கள் மகனின் வாழ்க்கை முக்கியம். எனவே எங்கள் மூவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். பிரிவது குறித்து மறைப்பதில் ஒன்றும் இல்லை. மேலும் இதுகுறித்து பேசவும் ஒன்றுமில்லை. ஒரு மகன் இருக்கையில் கணவரைப் பிரிவது என்பது அவ்வளவு எளிதல்ல. எங்களுக்கு மகனின் வாழ்க்கை முக்கியம். அவன் நன்றாக வளர்வதில் இருவரும் உறுதியாக உள்ளோம். நான் இயக்கும் மண்டோ படம் முடிவடையும் வரை நான் மும்பையில் இருப்பேன். அதற்குப் பிறகு நான் வளர்ந்த தில்லிக்கே செல்லலாமா என யோசித்துவருகிறேன் என்று கூறியுள்ளார். 

Advertisement

2002-ல் செளம்யா சென்னைத் திருமணம் செய்தார் நந்திதா தாஸ். இருவரும் 2007-ல் விவாகரத்து செய்தார்கள். பிறகு 2010-ல் சுபோத்தைத் திருமணம் செய்து தற்போது அவரைப் பிரிய முடிவெடுத்துள்ளார்.  

ஆனால் நந்திதாவின் கணவர் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் சுபோத் கூறியதாவது: இருவரும் இப்போதும் ஒரே வீட்டில்தான் வாழ்கிறோம். விடுமுறையின்போது மகனுடன் சேர்ந்து பிரான்சுக்குப் போகலாம் என முடிவெடுத்துள்ளோம். ஆனால், 3 நாள்களுக்கு முன்பு என் தந்தை மரணமடைந்துள்ளார். எந்தத் தம்பதிகள் சண்டை போடாமல் இருக்கிறார்கள்? இருவரும் திருமணம் செய்தபோது அனைவரையும் அழைத்து அறிவித்தோம். அதேபோல ஒருவேளை நாங்கள் பிரிய முடிவு செய்தால் அனைவரையும் அழைப்போம். அதன்மூலம் உண்மையான காரணத்தை உங்களால் எழுதமுடியும். கவனியுங்கள். நான் ஒருவேளை என்றுதான் சொல்கிறேன் என்று நந்திதா தாஸின் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.