செய்திகள்

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்தநாள். அவரது இசைக்கு என்ன வயது?

ரஹ்மானுக்கு 50 வயதா என்று ரசிகர்கள் கொஞ்சம் யோசிக்கலாம். ஆனால், இன்றைக்கும் அவர் பாடல்களில்...

எழில்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன. 

ஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க ரஹ்மானின் பாடல்கள்தான். அவருடைய ரசிகர்கள் தனக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்துவருகிறார்கள்.

2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், இன்றும் இந்தியத் திரையுலகின் நெ.1 இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் முக்கியமான இசையமைப்பாளராக, பெரிய படங்களின் முதல் தேர்வாக உள்ளார். கூடவே ஹாலிவுட் படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ரஹ்மானுக்கு 50 வயதா என்று ரசிகர்கள் கொஞ்சம் யோசிக்கலாம். ஆனால், இன்றைக்கும் அவர் பாடல்களில் இளமை ததும்புகின்றன. வற்றாத இளமையைக் கொண்டவைதான் ரஹ்மானின் பாடல்கள். 

வாசகர்களே, உங்களுக்குப் பிடித்த ரஹ்மான் பாடல் என்ன? எதனால் அந்தப் பாடல் உங்களைக் கவர்ந்துள்ளது? கமெண்ட்ஸில் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT