முகப்பு
செய்திகள்

தெறி பட சாதனை முறியடிப்பு: நான்கு நாள்களில் ரூ. 100 கோடி அள்ளிய பைரவா!

பைரவா படத்தின் முதல் நான்கு நாள் வசூல், தெறி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

Updated On : 17 ஜனவரி, 2017 at 3:39 PM
பகிர்:

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் - பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

பைரவா படத்தின் முதல் நான்கு நாள் வசூல், தெறி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று வெளியான பைரவா, முதல் நான்கு நாள்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. விஜய்யின் முந்தைய படமான தெறி 6 நாள்களில்தான் இந்த இலக்கை எட்டியது. அதை பைரவா முறியடித்துள்ளது. இத்தகவலை இப்பட நிறுவனம், அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Advertisement

சென்னையில் மட்டும் முதல் 4 நாள்களில் ரூ. 3.5 கோடி வசூலித்துள்ளது. இன்றுவரை அரசுப் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு நீண்ட பொங்கல் விடுமுறை என்பதால் இந்த அம்சம் பைரவா-வின் வசூலுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.