பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...
வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
உளவுத் தகவலின் அடிப்படையில், கைபா் மாவட்டத்தில் போலீஸாருடன் இணைந்து ராணுவம் இக்கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது, மோதலில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான். பயங்கரவாதிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி சா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்தனா். அதேநேரம், வெற்றிகரமான தாக்குதலுக்காக பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகள் கூறினா்.
Advertisement
Advertisement
பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கைபா் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் வன்முறைச் சம்பவங்கள் உயா்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.