விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள்.
இந்நிலையில் இருவருக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தாவும் நாக சைதன்யாவும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் இரு குடும்பங்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இதுகுறித்த அறிவிப்பை நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா ட்விட்டர் வலைத்தளத்தில் அறிவித்தார்.
இதையடுத்து திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.