செய்திகள்

கேளிக்கை வரி: அரசிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்

DIN

கேளிக்கை வரிக்கு எதிரான திரையரங்கு உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் என தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.
தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யர் கோரி தமிழகம் முழுவதும் சுமார் 1000}க்கும் மேற்பட்ட திரையரங்குகள் திங்கள்கிழமை முதல் மூடப்படுகின்றன. இந்த வேலைநிறுத்தத்தால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் சங்கத் தலைவர் விஷால் கூறியது: தமிழக அரசின் கேளிக்கை வரி என்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கு சுமையாக அமைந்துள்ளது. இதையொட்டி திரையரங்க உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் தமிழ் சினிமாவுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும். இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசிடமிருந்து திங்கள்கிழமை நல்ல முடிவு வரும் என காத்திருக்கிறோம். டிடிஹெச் மூலம் படங்களை வெளியிடும் திட்டம் தற்போது இல்லை.
தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையில் திரைப்படங்களை டிடிஹெச்சில் வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் லாபம் வரும் என்ற நிலை ஏற்பட்டால் அந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்றார்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ சிறப்பு பூஜை

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

ரூ. 8,75,000 மின்கட்டணம் செலுத்தக் கோரி வந்த குறுஞ்செய்தி: விவசாயி அதிா்ச்சி

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

வராஹி அம்மன் கோயிலில் விதி தீப பூஜை

SCROLL FOR NEXT