செய்திகள்

ஜூனியர் என்டிஆரின் ‘ஜெய் லவ குசா’ டீஸர் வெளியீடு!

இப்படத்தின் டீஸரை மூன்று கெட் அப்களுக்கும் ஒன்று என்ற விகிதத்தில் மூன்று டீஸர்களாக வெளிவிடும் முடிவில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

சரோஜினி

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவர இருக்கும் புது திரைப்படமான ‘ஜெய் லவ குசா’ டீஸர் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தை ஜூனியர் என்டிஆரின் சகோதரர் நந்தமூரி கல்யாண்ராம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இதில் மூன்று விதமான கெட் அப்களில் ஜூனியர் என்டிஆர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று கெட் அப்களில் ‘ஜெய்’ எனும் முதல் கெட் அப் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று டீஸராக வெளியாகியுள்ள நிலையில், வெளியான நிமிடத்தில் இருந்தே ஜூனியர் ரசிகர்கள் அதை ஆயிரக்கணக்கான முறை பார்க்கவும், பகிரவும் தொடங்கியுள்ளனர். இப்படத்தின் டீஸரை மூன்று கெட் அப்களுக்கும் ஒன்று என்ற விகிதத்தில் மூன்று டீஸர்களாக வெளிவிடும் முடிவில் இருக்கிறார்கள் படக்குழுவினர். இன்று ஜெய் கதாபாத்திரத்துக்கான டீஸர் வெளியாகியுள்ளது. அடுத்துள்ள இரண்டு டீஸர்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளனவாம்.

டீஸரைக் காண...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT