செய்திகள்

பாடலாசிரியர் சினேகனின் கார் கண்ணாடி உடைப்பு

சென்னையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

சென்னையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ்வரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர், தனது வீட்டின் முன் பகுதியில் சனிக்கிழமை காரை நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை நண்பகலில் சினேகனின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர். இந்தச் சம்பவத்தால் சினேகனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT