முகப்பு
செய்திகள்

ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் சாதனை: சமுத்திரக்கனி பெருமிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தது வாழ்நாள் சாதனை என்று இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜூலை, 2017 at 2:56 PM
பகிர்:

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தது வாழ்நாள் சாதனை என்று இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவன தயாரிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'காலா' . கபாலிக்குப் பிறகு ரஜினிகாந்த் - ரஞ்சித் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருகிறது.நானா படேகர், ஹ்யுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்

திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கே தாதாவாக வாழ்ந்த ஒருவரின் கதை என்று இப்படம் கூறப்படுகிறது. இதில் கரிகாலன் காலா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில்  தேசிய விருது பெற்ற நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிக்கிறார்.

Advertisement

ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி விபரம் வருமாறு:

ரஜினிகாந்த் அவர்களுடன் எனது முதல் ஷாட் முடிந்தவுடன், எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஓர் வாழ்நாள் சாதனையை முடித்த எண்ணம் உண்டானது. ரஜினிகாந்த் அவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்பதற்காக நான் நெடுங்காலம் காத்திருந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.