ஆறாவது முறையாக மணி ரத்னத்துடன் இணையும் சந்தோஷ் சிவன்!
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன் ஆகிய படங்களுக்குப் பிறகு ஆறாவது முறையாக மணி ரத்னம் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சந்தோஷ் சிவன்.
காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் புதிய படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கதை உருவாக்கம் முடிந்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் தேர்வாகியுள்ளார்.
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
Advertisement
இது ராம் சரண் நடிக்கும் படமல்ல. நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதற்கடுத்து மணி ரத்னம் இயக்கும் படத்தை ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.