செய்திகள்

திலீப் கைது: மகளைத் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி நீதிமன்றம் செல்லும் மஞ்சு வாரியர்! 

எழில்

நடிகை பாவனா விவகாரத்தில் நடிகர் திலீப் கைதானதையொட்டி, மகள் மீனாட்சியைத் தன் வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். 

மலையாள நடிகர் திலீப்பும் (48) நடிகை காவ்யா மாதவனும் (32) கடந்த வருடம் கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். திலீப் - காவ்யா ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்பு 1998ல் நடிகை மஞ்சு வாரியரைத் திருமணம் செய்த திலீப், 2015-ல் அவரை விவாகரத்து செய்தார். இருவருக்கும் மீனாட்சி என்கிற மகள் உண்டு. அதேபோல தொழிலதிபர் நிஸ்சால் சந்திராவை 2009ல் திருமணம் செய்த காவ்யா, அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார்.

காவ்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டபோது, என்னுடைய திருமணம் என் மகளின் சம்மதத்தைப் பொறுத்தது என திலீப் கூறியிருந்தார். திலீப்பின் மகள் மீனாட்சியின் சம்மதம் இல்லாததால் தான் திருமணம் தள்ளிப்போகிறது, இதனால் திலீப்பின் குடும்பத்தின் பிரச்னைகள் நிலவுகின்றன என்றும் செய்திகள் உலவின. இந்நிலையில் மகளின் சம்மதத்துடன் மகளின் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார் திலீப். 

திலீப் - காவ்யா திருமணம் குறித்து மீனாட்சி செய்தியாளர்களிடம் பேசியபோது, என் அப்பாவைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினேன். அவர் இந்த முடிவை எடுக்க நானும் காரணம். அவருடைய முக்கியமான நாளைக் காண்பதில் எனக்கும் மகிழ்ச்சி என்றார்.     

இந்நிலையில் திலீப் கைதானதையொட்டி, அவருடைய மகள் மீனாட்சி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. திலீப் - மஞ்சு வாரியர் ஆகிய இருவருக்கும் விவாகரத்து ஆனதிலிருந்து மீனாட்சி திலீப் வசம் வளர்ந்து வருகிறார். தான் அப்பாவுடன் வளரவேண்டும் என்கிற மீனாட்சியின் முடிவுக்கு மஞ்சு வாரியரும் சம்மதம் தெரிவித்தார். 

திலீப்பின் கைதுக்குப் பிறகு மீனாட்சியின் எதிர்காலம் கருதி அவரைத் தன் வசம் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளார் மஞ்சு வாரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT