செய்திகள்

ஸ்டார் மா டி.வியில் நேற்று முதல் தெலுங்கு பிக் பாஸ் ஆரம்பம்!

சரோஜினி

முன்னதாகக் கிடைத்த செய்திகளின் படி தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு வெற்றிகரமாக 21 அவது நாளைக் கடந்து விட்டது. தற்போது தமிழில் பலவிதமான எதிர்மறை விமர்சனங்களுடன் மிக மிகப் பரபரப்பான நிகழ்ச்சியாக ஸ்டார் விஜய் டி.வி யில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், இதே போன்றதொரு நிகழ்ச்சி தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க விரைவில் துவக்கப் படவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அந்நிகழ்ச்சிக்கான டீஸர் கடந்த வாரம் வெளியான நிலையில் தற்போது முன்னரே தெரிவித்திருந்தபடி நேற்று அதாவது ஜூலை 16 முதல் ஒவ்வொருநாளும் இரவு 9 மணிக்கு ஸ்டார் மா டி.வி யில் தெலுங்கு பிக் பாஸ் ஒளிபரப்பாகவிருக்கிறது.

தமிழில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தெலுங்கில் 12 போட்டியாளர்கள் நேற்று முதல் நாள்  ‘பிக் பாஸ்’ நிகழ்வில் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தனர். அவர்களில் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த சில பிரபலங்கள் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாப்புலர் தெலுங்கு சூப்பர் ஹிட் போலீஸ் ஸ்டோரி திரைப்படங்களை எல்லாம் இமிட்டேட் செய்து கர்ண கடூர இம்சை அளிக்கக் கூடிய டெரர் காமெடிபடங்களாக சுட்டுத் தள்ளி கெத்து காட்டும் அலம்பல் ஹீரோவான சம்பூர்னேஷ் பாபு, கந்தசாமி திரைப்படத்தில் ‘என் பேரு மீனாகுமரி’ பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட நடிகையான முமைத்கான் மற்றும் பாடகி கல்பனா ராகவேந்தர் (வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி உல்ளிட்ட திரைப்படங்களில் அப்பா கேரக்டரில் நடித்த பிரபல பாடகர் ராகவேந்தரின் மகள்) உள்ளிட்டோர் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்களே. 

இவர்களைத் தவிர மற்றுமுள்ளவர்களை தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களோடு சேர்த்து மேலும் சிலரோடு மொத்தம் 12 போட்டியாளர்களுடன் தெலுங்கு பிக்பாஸ் நேற்று முதல் நாளைத் தாண்டி இன்று இரண்டாம் நாளில் அடியெடுத்து வைக்கவிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT