செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள்: நடிகை கஸ்தூரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் டிவியில் என்னைப் பலமுறை அழைத்தார்கள்... 

எழில்

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்ததாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் டிவியில் என்னைப் பலமுறை அழைத்தார்கள். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அழைத்தார்கள். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒருவருடைய கேள்விக்கு அளித்த பதிலில், நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை. என் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது என்று கஸ்தூரி பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

SCROLL FOR NEXT