செய்திகள்

கோழைத்தனமான செயல்: ஓவியாவின் நிலைமை குறித்து த்ரிஷா கோபம்?

ஓவியாவுக்கும் பொருத்தமாக இருப்பதால் த்ரிஷாவின் பதிவுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன...

எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இந்நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் காயத்ரி-நமீதா ஆகியோருக்கும் இடையே ஏராளமான கருத்துமோதல்கள் உருவாகிவருகின்றன. இது தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி, ஓவியா ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராக ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஓவியாவுக்கு ஆதரவானது போன்ற, எந்தப் பெயரும் குறிப்பிடாமல் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. ஆனால் அது சமீபத்திய சூழலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஓவியாவுக்கும் பொருத்தமாக இருப்பதால் த்ரிஷாவின் பதிவுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

எந்த ஒரு சூழலிலும் யாராக இருந்தாலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அது நிஜமாகவே இருந்தாலும் அல்லது வேடிக்கையாக இருந்தாலும், எளியவர்களைக் கொடுமைப்படுத்துதல் என்பது கோழைத்தனமான செயலாகும் என்று எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT