FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது என நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

Updated On : 27 ஏப்ரல் 2026, 8:40 pm IST
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் - கோப்புப் படம்
பகிர்:

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது என தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2 ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது.

தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண அமைப்பு ரீதியாக தாங்கள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தாங்கள் வெளியிட்டது வருத்தத்திற்குரியது.

Advertisement

Advertisement

திரைத்துறை சார்ந்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அனுகுமுறைமை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்மாறாக, நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இதுவரை சங்களுக்கு எந்தவித கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்பதையும் அது தொடர்பா எந்தவித பேச்சுவார்த்தையும் நிகழ்த்த அழைக்கவில்லை என்பதையும் இங்கு ஈட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அத்துடன் தென்னித்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த எங்கள் சட்ட விதிகளில் இடமில்லை என்பதையும் இதன் வாயிலாக பதிவு செய்கிறோம்.

சுமார் ஓராண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர சங்கத்தின் முன்னெடுப்பினால் தமிழ் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான குழலை உருவாக்கும் அமைப்புகள் ரீதியிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவோலையை நம் இருதரப்பின் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் குழவின் கலந்தாலோசனைக்குப் பிறகு இறுதி செய்து, அதை தங்களிடம் நாங்கள் ஒப்படைத்ததையும், அது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இதுநாள் வரை எந்த நகர்வும் இல்லை என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.

இதவரை எங்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் தாங்கள் மறுக்க இயலாது.

ஆகவே, தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் முதலீட்டையும்கூட பிரதானமாக பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறும், முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியான பிறகு, பரஸ்பரம் பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம் என்றும் அன்புடன் கேட்டுகோள்கிறோம்.

இதனிடையே கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமுக வலைதளங்களிலும் வெகு வேகமாக பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும் தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்துப் சித்திரித்து வருவ்து பெரும் வேதனைக்குரியது.

அது தவறான தகவல் எனில், உடனடியாக அதை மறுத்து தங்கள் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடுமாறும் அந்தத் தகவல்கள் தங்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தால் உடனடியாக அத்தகு உண்மைக்கு புறம்பான அறிக்கையை நமது சந்திப்பிற்கு முன்னர் திரும்பப் பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இணைந்து செயல்பட்டு திரைத்துறையினர் அனைவரின் நல்ல நிகழ் காலத்திற்காகவும் வளமான வருங்காலத்திற்காகவும் எங்கள் ஒத்துழைப்பை நல்க என்றென்றும் ஆயத்தமாக உள்ளோம். அதையே துறை சார்ந்த பிறரிடமும் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

summary

No Support for Producers' Council Strike: Actors' Association Announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments