முகப்பு
செய்திகள்

இந்த வாரம் வெளியாகும் அர்ஜூனின் 150-வது படம்!

அர்ஜூனின் 150-வது படமான நிபுணன், தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது... 

Updated On : 25 ஜூலை, 2017 at 11:09 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:00 PM

1980களின் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்து இன்னமும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களில் ஒருவர், அர்ஜூன்.

அவர் கதாநாயகனாக நடிக்கும் நிபுணன் படம் இந்த வாரம் வெளியாகிறது. அர்ஜூன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி போன்றோர் நடித்துள்ள இப்படத்தை அருண் வைத்யநாதன் இயக்கியுள்ளார். 2009-ல் வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இவர் இயக்கினார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் படம் இது. அர்ஜூனின் 150-வது படமான நிபுணன், தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 

நிபுணன் படத்தைத் தமிழ்த் திரையுலகம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது. ஆக்‌ஷன் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். அதேபோல இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.