செய்திகள்

ஓவியாவுக்கு நெருக்கடி? முதல் நாளிலேயே இந்திய அளவில் டிரெண்டிங் ஆன பிந்து ஆர்மி!

ஏற்கெனவே ஓவியா ஆர்மி என்றொரு ரசிகர் படை இயங்கி வருகிற வேளையில் பிந்து ஆர்மி என்றொரு புதிய ரசிகர் படையும்...

எழில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிவருகின்றன. 

தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி அறிமுகம் ஆகியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் - ஜூலி vs ஓவியா என்றொரு போட்டி நடைபெற்று வருகிற சூழலில், பிந்து மாதவி யாருக்கு ஆதரவாக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.

பிந்து மாதவி திடீரென நிகழ்ச்சிக்குள் நுழைந்திருப்பது சமூகவலைத்தளத்திலும் பலவிதமான ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஓவியா ஆர்மி என்றொரு ரசிகர் படை இயங்கி வருகிற வேளையில் பிந்து ஆர்மி என்றொரு புதிய ரசிகர் படையும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து பிந்து மாதவி குறித்துப் பதிவுகள் எழுதியதால் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் டாப் 10-ல் டிரெண்டிங்கில் பிந்து ஆர்மி ஹேஷ்டேக் இடம்பிடித்தது. 

இதனால் வரும்நாள்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா vs பிந்து மாதவி போட்டி உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிரட்டிப் பணம் பறித்தல், துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

நாய்கடியால் மட்டுமின்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் -உச்சநீதிமன்றம்

சென்னையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

கோட்டக் மஹிந்திரா வங்கி கடனளிப்பு 16% உயா்வு

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

SCROLL FOR NEXT