செய்திகள்

ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் பட டிரெய்லர்!

போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.

எழில்

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017 - அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இந்த நான்குப் பதிப்புக்கும் சொந்தக் குரலில் பேசியுள்ளார் ஸ்ரீதேவி. 

ஸ்ரீதேவி 2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதனால் தற்போது மாம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது,

மாம் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை மிரட்டல் விடுத்த எஃப்.ஜே.! பிக் பாஸிடம் கதறிய திவாகர்!

இந்த வாரம் ஓடிடியில்... பட்டய கிளப்பும் படங்கள்!

பல்கலை. பேராசிரியர்கள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!

அருங்காட்சியகமாகிறதா, ரவீந்திரநாத் தாகூரின் வீடு?

தந்தை அறிமுகமான நாளில் பைசனுடன் வரும் துருவ் விக்ரம்!

SCROLL FOR NEXT