செய்திகள்

காலா படத்துக்கு எதிராக வழக்கு: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

"காலா' திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை 6 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

"காலா' திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை 6 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜி.எஸ்.ஆர். விண்மீன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கே.ராஜசேகரன் என்பவர் 6 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த் இப்போது படப்பிடிப்பு நடத்தி வரும் "காலா’ (எ) கரிகாலன் படத்தின் தலைப்பு, மூலக்கரு அனைத்தும் என்னுடைய உருவாக்கம் ஆகும். இந்தத் தலைப்பை ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால், செல்வாக்கு மிகுந்த ஒருசிலருக்கு ஆதரவாக, என்னுடைய தலைப்புப் பதிவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை புதுப்பிக்காமல் கைவிட்டுள்ளது. பதிவு விதிகள் தவறாக பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம், எனது தலைப்பும், மூலக் கருவும் மறுபதிப்பு செய்து படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே "காலா’ படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளன. எனவே, "காலா’ படத்தின் படப்பிடிப்பு மேற்கொண்டு தொடர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வருகிற 15 ஆம் தேதி பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT