முகப்பு
செய்திகள்

காலா படத்தில் ரஜினி ஜோடி ஹுமா அல்ல, ஈஸ்வரி ராவ்!

ஈஸ்வரி ராவ், ரஜினியின் மனைவியாக நடிக்கிறார்...

Updated On : 13 ஜூன், 2017 at 3:34 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:14 PM

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம்.

இப்படம் குறித்து ஹுமா ட்விட்டரில் கூறியதாவது: காலா படத்துக்காகத் தயாராகிக்கொண்டு வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக ஜரீனாவாக மாறிக்கொண்டு வருகிறேன். கடுமையாக உழைக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றார்.

இந்நிலையில் காலா படத்தில் ஹுமா குரேஸி, ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் இதுகுறித்து தெரிவித்ததாவது: 

Advertisement

படத்தில் ரஜினி ஜோடியாக ஹுமா குரேஸி நடிக்கவில்லை. ஈஸ்வரி ராவ், ரஜினியின் மனைவியாக நடிக்கிறார். அதேசமயம் ஹுமாவுக்கு முக்கியமான வேடம். அரசியல்வாதியாக நடிக்கும் நானா படேகரை ரஜினி எதிர்க்க ஹுமா உதவுவார். மற்றபடி செய்திகளில் வெளியானதுபோல அவர் ரஜினியின் ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். ரஜினி - ஈஸ்வரி ராவ் இணைந்து நடிக்கும் காட்சியின் புகைப்படமும் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஸ்வரி ராவ், அவரது குடும்பத்துடன் 30 வருடங்களாக சென்னையில் வசித்துவருகிறார். இரு குழந்தைகள் உள்ளார்கள். 

1997-ல் ராமன் அப்துல்லா படத்தில் நடித்து கவனம் பெற்றார். 2006- சரவணா படத்தில் நடித்தபிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.