பிரபாஸ் - சல்மான் கான் படத்தை இயக்கவில்லை: பிரபல இயக்குநர் அறிவிப்பு
கடந்த 3 வாரங்களாக ஸ்பெயினில் உள்ளேன். இந்த வதந்தி எப்படிப் பரவியது...
கடந்த சில நாள்களாக ஒரே பரபரப்பு. கோல்மால், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி, பிரபாஸ் - சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் என்று தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளிவந்துகொண்டிருந்தது.
இதையடுத்து இந்தச் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் ரோஹித் ஷெட்டி. அவர் கூறியதாவது: இது பொய்யான செய்தி. ஃபியர் ஃபேக்டரை (தொலைக்காட்சி நிகழ்ச்சி) இயக்குவதற்காகக் கடந்த 3 வாரங்களாக ஸ்பெயினில் உள்ளேன். இந்த வதந்தி எப்படிப் பரவியது எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் கோல்மால் அகைன் படம் தீபாவளி அன்று வெளிவருகிறது. அதற்கடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளார்.
Advertisement
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு, தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் சாஹு படத்தில் நடித்துவருகிறார் பிரபாஸ்.