செய்திகள்

தமிழ்நாட்டின் யாஷ் சோப்ரா இயக்குனர் ஏ.எல்.விஜய்: வனமகன் நாயகி சாயேஷா!

பாலிவுட்டில் இயக்குனர் யாஷ் சோப்ரா போலவே கோலிவுட்டில் இயக்குனர் ஏ.எல்.விஜய், தனது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் உட்பட பிற பெண்களை கெளரவமாக நடத்தியதைக் கண்டதும்

சரோஜினி

இப்படிச் சொன்னது யார் தெரியுமா? இயக்குனர் விஜயின் வெளிவரவிருக்கும் புது திரைப்படமான ‘வனமகன்’ நாயகி சாயேஷா. படத்தைப் பற்றியும் தமிழில் தனது அறிமுகம் குறித்தும் பேசுகையில் நடிகை சாயேஷா இப்படிக் கூறினார். பாலிவுட்டில் இயக்குனர் யாஷ் சோப்ரா போலவே கோலிவுட்டில் இயக்குனர் ஏ.எல்.விஜய், தனது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் உட்பட பிற பெண்களை கெளரவமாக நடத்தியதைக் கண்டதும் தனக்கு இப்படிச் சொல்லத் தோன்றியதாக சாயேஷா தெரிவித்துள்ளார்.

மேலும் பழம்பெரும் பாலிவுட் சூப்பர் ஹீரோவான திலீப் குமாரின் பேத்தியான சாயேஷா... தனக்கு அந்த உறவு முறை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்றும், நானும், என் அம்மாவும் மட்டுமே இப்போது எங்களது உலகத்தில் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். அதோடு ஒரு புகழ்பெற்ற பிரபலத்தின் உறவினர் என்பது சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இங்கே  கடின உழைப்பிருந்தால் மட்டுமே நீடிக்க முடியும் என்று தான் நம்புவதாகக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT