முகப்பு
செய்திகள்

தமிழ் நடிகைகளுக்குப் புதிய போட்டியாளர் - ஷ்ரதா ஸ்ரீநாத்! (படங்கள்)

ஷ்ரதா, கதாநாயகியாகத் தமிழில் அறிமுகமாகும் இவன் தந்திரன் படம் இந்த வாரம் வெளியாகிறது...

Updated On : 27 ஜூன், 2017 at 2:57 PM
பகிர்:

கன்னடப் படமான யூ டர்ன் மூலமாகக் கவனம் பெற்றவர் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத். சமீபத்தில் இந்தப் படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றார். மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சிறிய வேடத்தில் நடித்த ஷ்ரதா, தற்போது தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். இவர் கதாநாயகியாகத் தமிழில் அறிமுகமாகும் இவன் தந்திரன் படம் இந்த வாரம் வெளியாகிறது.

இவர் அடுத்து நடித்து வெளியாகவுள்ள மூன்று படங்கள் இவை:

கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இவன் தந்திரன். இந்தப் படம் வரும் வெள்ளியன்று வெளிவரவுள்ளது.

Advertisement

இது சற்றே பெரிய, எதிர்பார்ப்பில் உள்ள படம். விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள படம் - விக்ரம் வேதா. தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதிச் சுற்று போன்ற படங்களைத் தயாரித்த சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது. 

பிரேமம் மலையாளப் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அழுத்தமாக அறிமுகம் ஆனவர் நிவின் பாலி. நேரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் தற்போது நடித்துவரும் படம் ரிச்சி. ஷ்ரதா ஸ்ரீநாத், நட்ராஜ், பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கும் இப்படத்தை மிஸ்கினிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கெளதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். தூத்துக்குடியில் வசிக்கும் ரெளடி
கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். 

சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் புதிய நடிகைகளின் வரவு அதிகமாக உள்ளது. இதில் வனமகன் படத்தில் நடித்த சயீஷாவும் ஷ்ரதா ஸ்ரீநாத்தும் கவனம் பெற்று புதிய கோலிவுட் நட்சத்திரங்களாக அடையாளம் பெற்றுள்ளார்கள். இந்த மூன்று படங்களின் வெற்றி, தோல்வியில் அடங்கியுள்ளது ஷ்ரதாவின் அடுத்தடுத்த முன்னேற்றங்கள். கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா ஆகிய நடிகைகளுக்கு எந்தளவுக்குப் போட்டியாக ஷ்ரதா இருப்பார் என்பது இந்த மூன்று படங்களில் தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.