செய்திகள்

இந்தியாவின் விரும்பத்தக்க ஆண்கள் ‘டாப் 10’ பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகர்!

பாகுபலி ஸ்டார்களான பிராபாஸும், ராணாவும் டாப் 10 ல் இடம் பெறாதது அவர்களது ரசிகர்களை ஓரளவு வருத்தத்தில் ஆழ்த்தலாம். ஏனெனில் ‘பாகுபலி தி கன்குளூசன்’ வெளியான பின் இந்தியா முழுவதிலுமே பிரபாஸ் மற்றும்

சரோஜினி

‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் 50  விரும்பத்தக்க ஆண்கள் தர வரிசைப் பட்டியலில் டாப் 10 லிஸ்டில் இடம் பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகர் மகேஷ் பாபு மட்டுமே. டைம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மகேஷ் பாபு 7 ஆம் இடம் பெற்றுள்ளார். இந்த இடத்தைப் பிடிக்க மகேஷ்... ரன்பீர் கபூர், ஜான் ஆப்ரஹாம், எம்.எஸ். தோனி, தனுஷ் உள்ளிட்டோரைப் பின்னுக்குத் தள்ள வேண்டியதாக இருந்தது. மேற்கண்ட மூவரும் அந்தப் பட்டியலில் முறையே 12, 16, 26 ஆம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

பாகுபலி ஸ்டார்களான பிராபாஸும், ராணாவும் டாப் 10 ல் இடம் பெறாதது அவர்களது ரசிகர்களை ஓரளவு வருத்தத்தில் ஆழ்த்தலாம். ஏனெனில் ‘பாகுபலி தி கன்குளூசன்’ வெளியான பின் இந்தியா முழுவதிலுமே பிரபாஸ் மற்றும் ராணாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அபிரிமிதமாக அதிகரித்திருப்பதாக நம்பப் பட்டு வந்த சூழலில் அவர்களால் டாப் 10 ல் இடம் பெற முடியாமை ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. டைம் பட்டியலில் பிரபாஸ் 22 ஆம் இடத்தையும், ராணா 22 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களது கடந்த ஆண்டைய தர வரிசைப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இவர்கள் டைம் பட்டியலில் பின்னடைந்திருக்கிறார்கள் என்றே கருதலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT