செய்திகள்

தற்காப்பு கலை கற்பதற்காக சீனா செல்கிறார் பிரபுதேவா!

'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய

DIN

'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘யங் மங் சங்’. இதில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் பிரபு தேவா ஒரு குங்ஃபூ மாஸ்டராக நடிக்கிறார். இப்படம் முழுவதும் குங்ஃபூவுக்கு முக்கியத்துவம் உள்ளது. எனவே நடிப்புக்காக சும்மா ஸ்டன்ட் செய்யாமல்  பிரபு தேவா முறைப்படி அதனைக் கற்றுக் கொள்ள கூடிய விரைவில் சீனா செல்லவிருக்கிறார்.

மார்ஷல் ஆர்ட்டில் கலக்கப் போகும் நடன இயக்குனர் தென்னிந்தியாவில் பிரபு தேவா ஒருவராகத் தான் இருக்க முடியும். இதைப் பற்றி பிரபு தேவா கூறுகையில் நடனமும் தற்காப்புக் கலையும் ஒன்றே போலத் தான். மார்ஷல் ஆர்ட் ஒன்றினை முறைப்படி கற்பதன் மூலம் தன்னுடைய நடனத்தையும் மேலும் சிறப்பாக்கிக் கொள்ள முடியும் என்றார்.

யங் மங் சங் ஒரு ஆக்‌ஷன் காமெடி திரைப்படம். இதில் தங்கர் பச்சான் பிரபு தேவாவுக்குத் தந்தையாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் ஆர்.ஜே.பாலாஜி, தங்கர் பச்சான், 'பாகுபலி' பிரபாகர் கலக்கேயா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கும்கி அஸ்வின், சித்ரா லட்மணன், மாரிமுத்து ஆகியோர் நடிக்கின்றனர். வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபு தேவா தேவி திரைப்பட வெற்றிக்குப் பிறகு தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கிவிட்டார். யங் மங் சங் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, குலேபகாவலி படத்திலும் நடிக்கிறார். இதில் அவருக்கு ஹன்ஷிகா ஜோடியாக நடிக்கிறார். இவ்விரு படங்கள் தவிர ‘கருப்பு ராஜா வெள்ள ராஜா’ என்ற படத்தையும் பிரபுதேவா இயக்கி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT