முகப்பு
செய்திகள்

மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்லர்: கவிஞர் வைரமுத்து அறிக்கை

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்...

Updated On : 8 மார்ச், 2017 at 10:42 AM
பகிர்:

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதிக்கு அருகே திங்கள்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் தோட்டா பாய்ந்து மீனவர் பிரிட்ஜோ (21) அதே இடத்தில் உயிரிழந்தார். செரோன் (22) என்ற மற்றொரு மீனவர் காலில் காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்லர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.