செய்திகள்

பாகுபலி 2-வை விடவும் பவர் பாண்டி மீது நம்பிக்கை!

தமிழ்நாட்டில் பவர் பாண்டி படத்தின் விநியோக உரிமையை கே புரொடக்‌ஷன்ஸைச் சேர்ந்த ராஜராஜன் பெற்றுள்ளார்.

எழில்

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் பவர் பாண்டி படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங், திவ்யதர்ஷினி போன்றோர் நடித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. இப்படத்தின் கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையாகும்.

27 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் என்னை மீண்டும் கதாநாயகன் ஆக்கியுள்ளார். அவருக்கு என் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறியுள்ளார் ராஜ்கிரண்.

தமிழ்நாட்டில் பவர் பாண்டி படத்தின் விநியோக உரிமையை கே புரொடக்‌ஷன்ஸைச் சேர்ந்த ராஜராஜன் பெற்றுள்ளார். பாகுபலி 2-வின் உரிமையையும் அவர்தான் வாங்கியுள்ளார்.

இந்தப் படம் குறித்து ராஜராஜன் பேசும்போது: நான் பாகுபலி 2-வை விடவும் பவர் பாண்டி படம் மீது மிகவும் நம்பிக்கையாக உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT