தமிழ்ப் புத்தாண்டன்று வெளியாகும் 3 படங்கள்!
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள பவர் பாண்டி, ஆர்யா நடித்துள்ள கடம்பன், லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா...
இந்த வருட தமிழ்ப் புத்தாண்டுக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும் கடுமையான போட்டி ஒன்று நிலவுகிறது.
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள பவர் பாண்டி, ஆர்யா நடித்துள்ள கடம்பன், லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளிவரவுள்ளன.
Advertisement
வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள பவர் பாண்டி படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. இப்படத்தின் கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையாகும்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள சிவலிங்கா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் லாரன்ஸ். பி. வாசு இயக்கியுள்ள இப்படத்தில் ரித்திகா சிங், சக்தி வாசு போன்றோரும் நடித்துள்ளார்கள்.
ஆர்யா, கேத்ரீன் தெரசா நடிப்பில் ராகவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், கடம்பன்.
பாகுபலி 2, ஏப்ரல் 28 அன்று வெளிவருவதால் இந்த மூன்று படங்களும் இரு வாரங்கள் போட்டியின்றி வசூலை அள்ள நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.