விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் 'கரு'
தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் சாய் பல்லவி இதுவரை தமிழ்ப் படம் எதிலும் நடித்தது கிடையாது...
மலையாளப் படமான பிரமேம் மூலமாக தமிழ்ப் பெண் சாய் பல்லவி அதிக கவனம் பெற்றாலும் அவர் இதுவரை எந்தவொரு தமிழ்ப்படத்திலும் நடித்ததில்லை.
மலையாளப் படமான சார்லி தமிழ் ரீமேக்கில் மாதவனுக்கு ஜோடியாக ஒப்பந்தமானார் சாய் பல்லவி. இதை இயக்கவிருந்தவர் விஜய். ஆனால் அந்தப் படம் தொடங்க தாமதம் ஆனதால் சாய் பல்லவியைக் கதாநாயகியாகக் கொண்டு கரு என்கிற புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் விஜய். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன், மே 19 அன்று வெளிவருகிறது. தெலுங்கில் அறிமுகமாகியுள்ள சாய் பல்லவியின் ஃபிடா படமும் விரைவில் வெளிவரவுள்ளது.
Advertisement