முகப்பு
செய்திகள்

100% லவ் ரீமேக்: ஜி.வி. பிரகாஷின் புதிய படம்!

பி. சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம்...

Updated On : 6 மே, 2017 at 3:20 PM
பகிர்:

பி. சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் - 100% லவ். இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் படத்தை இயக்கிய சுகுமாரின் தயாரிப்பில் பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளரும், பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றியவருமான MM.சந்திரமௌலி, இதன் தமிழ் ரீமேக் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ், கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிங்கம் எனப் பல ஹிந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டட்லி இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

Advertisement

100% லவ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.