செய்திகள்

சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடிக்கும் ரெஜினா கஸாண்ட்ரா

DIN

அழகும், திறமையும் ஒருங்கே வாய்க்க பெற்ற, ரசிகர்களை தன் அபார அழகால் கவர்ந்து இழுக்கும் துறுதுறு நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரெஜினா, எளிதாக எந்த ஒரு வேடத்திலும்  பொருந்தி போகக் கூடியவர். தமிழ் சினிமாவில் தன் அதிர்ஷ்ட தேவதையாக வலம் வரும் இவர், நடித்தாலே அந்த படமும் வெற்றி படமாக மாறுவது தனிச்சிறப்பு. 

மாநகரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக  சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ள ரெஜினா, இயக்குனர் எழில் படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமான விஷயம், மிகவும் சௌகர்யமான இயக்குனர் அவர். வணிக ரீதியான படத்துக்கு தேவையான சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் எழில். எனக்கும், உதயநிதிக்கும் பொருத்தமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. 

உதயநிதி மிகவும் எளிமையான மனிதர், அவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. அவரோடு நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் என தன் ஹீரோ உதயநிதியை பற்றியும் புகழ்ந்து பேசுகிறார்.

சரவணன் இருக்க பயமேன் ஒரு முழுநீள பொழுதுபோக்குப் படம், கோடை காலத்தில் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும். இமானின் அற்புத இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இசை மட்டுமல்லாமல் யுகபாரதியின் பாடல் வரிகளும் பேசப்படும் என்கிறார் ரெஜினா .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT