செய்திகள்

தமிழகத்தில் விரைவில் நூறு கோடி வசூலை அடையவுள்ள பாகுபலி 2

தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் ரூ. 100 கோடியைத் தொடுவது சாதனையாக இருக்கிற...

எழில்

பாகுபலி 2 படத்தின் வசூல் நிலவரம் நாளுக்குநாள் ஆச்சர்யங்களை அளித்துவருகிறது.

தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் ரூ. 100 கோடியைத் தொடுவது சாதனையாக இருக்கிற பட்சத்தில் பாகுபலி 2 படம், விரைவில் ரூ. 100 கோடி என்கிற உச்சத்தை அடையவுள்ளது.

சமீபத்திய தகவலின்படி இதுவரை ரூ. 80 கோடியை தமிழ்நாட்டில் எடுத்துள்ளது பாகுபலி 2. இதில் பெரும்பங்கு தமிழ் பாகுபலி 2-வுக்கு உரியது. எனவே இதேவேகத்தில் சென்று, இன்னும் நான்கு நாள்களில்  ரூ. 100 கோடியை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் என்பது எத்தகைய சாதனையோ அதேபோல தமிழ்நாட்டில் பாகுபலி 2, ரூ. 100 கோடியைத் தொடுவதும் அதற்கு நிகரான சாதனைதான்.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

SCROLL FOR NEXT