முகப்பு
செய்திகள்

ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரேசில் செல்லவுள்ள தனுஷ்!

வடசென்னை படத்தின் இரண்டாவது பகுதிப் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ்...

Updated On : 10 மே, 2017 at 3:59 PM
பகிர்:

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ள தனுஷ், வடசென்னைப் படத்தின் இரண்டாவது பகுதிப் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள பிரேசில் செல்லவுள்ளார்.

பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', ஹாலிவுட் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். அவருடன் இணைந்து ‎Uma Thurman‬ மற்றும் ‎Alexandra Daddario போன்றோரும் நடிக்கிறார்கள். Marjane Satrapi இயக்குகிறார்.

தற்போது வடசென்னை படத்தின் இரண்டாவது பகுதிப் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். விரைவில் பிரேசில் செல்ல உள்ள தனுஷ், அடுத்த மூன்று மாதங்களை ஆங்கிலப் படத்துக்காக ஒதுக்கியுள்ளார்.

Advertisement

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ள இந்தப் படம், ஜூலை 28-ம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.