10 லட்சம் பேர் டவுன்லோட் செய்த பாகுபலி கேம்!
பாகுபலி 2 படம் வெளியானபிறகு இதற்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது.
பாகுபலி என்கிற பெயரில் என்ன பொருள் விற்கப்பட்டாலும் மக்களின் கவனம் அதில் திரும்புகிறது.
பாகுபலி படத்தை முன்வைத்து பாகுபலி கேம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இதை பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் பாகுபலி படத் தயாரிப்பாளருடன் இணைந்து தயாரித்தது.
பாகுபலி 2 படம் வெளியானபிறகு இதற்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. தற்போது இந்த கேம், 10-வது இடத்தைப் பிடித்து இந்தியாவில் அதிகம் தரவிறக்கப்பட்ட கேம்களில் ஒன்று என்கிற பெயரைப் பெற்றுள்ளது.
Advertisement
24 MB மட்டுமே உள்ள இந்த கேம் - ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.