திருட்டு விசிடியை ஒழிக்க முதல்வரிடம் விஷால் மனு!
திருட்டு விசிடி பிரச்னைகளுக்கு நடவடிக்கை கோரி முதல்வரிடம் விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று மனு அளித்தார்கள்.
திருட்டு விசிடி பிரச்னைகளுக்கு நடவடிக்கை கோரி முதல்வரிடம் விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று மனு அளித்தார்கள்.
திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்த் திரையுலகில் மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என நடிகர் விஷால் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் விஷால் உள்ளிட்ட தயாரிப்பு நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். திருட்டு விசிடி உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் செங்கோட்டையன் உடனிருந்தார்.
Advertisement