முகப்பு
செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் துவக்கப்படுகிறது 'ஜெயம்' ரவியின் புதிய படம்!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் 'ஜெயம்' ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் சங்கமித்ரா பட துவக்க விழாவானது...

Updated On : 17 மே, 2017 at 2:57 PM
பகிர்:

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் 'ஜெயம்' ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் சங்கமித்ரா பட துவக்க விழாவானது, உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது

பிரான்சில் உள்ளது கேன்ஸ் நகரம்.இங்கு வருடம் தோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவானது உலகப் புகழ் பெற்றது. 70-ஆவது ஆண்டு திரைப்பட விழாவானது இன்று தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது  இந்த திரைப்பட விழாவில் நடிகர் 'ஜெயம்' ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் சங்கமித்ரா பட துவக்க விழாவானது நடைபெற உள்ளது. இதற்காக சங்கமித்ரா படக்குழுவினர் செவ்வாய் இரவு கேன்ஸ் புறப்பட்டு சென்றனர்.

இது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில், 'சங்கமித்ரா துவக்க விழாவுக்காக கேன்ஸ் புறப்படுகிறோம்.கனவு நனவான தருணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.     

Advertisement

இந்த படத்தினை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்  இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படும் இந்தப்  படத்தில் ஆர்யா மற்றும் சுருதி ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர் என்றும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படமானது, பின்னர் ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்படுமென்றும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.