செய்திகள்

தெலுங்கிலும் தயாராகும் சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்!

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது.

எழில்

மலையாளப் படமான சார்லி தமிழ் ரீமேக்கில் மாதவனுக்கு ஜோடியாக ஒப்பந்தமானார் சாய் பல்லவி. இதை இயக்கவிருந்தவர் விஜய். ஆனால் அந்தப் படம் தொடங்க தாமதம் ஆனதால் சாய் பல்லவியைக் கதாநாயகியாகக் கொண்டு கரு என்கிற புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் விஜய். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

இந்நிலையில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நாக செளரியா நடிக்கவுள்ளார். 

ஃபிடா படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமான சாய் பல்லவி தற்போது அடுத்தத் தெலுங்குப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

தில் ராஜூ தயாரிப்பில், வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நானிக்கு ஜோடியாக எம்சிஏ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

”வறுமையால் உறுப்பை விற்கும் குடும்பங்களின் மனநிலை..!” My Lord படம் குறித்து இயக்குநர் ராஜு முருகன்!

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT