செய்திகள்

ஜூன் 16 வெளிவரும் ஹண்டர்ஸ் ப்ரேயர்!

IANS

சாம் வர்திங்டன் நடிக்கும் ஹாலிவுட் படமான ‘ஹண்டர்ஸ் ப்ரேயர்’ இந்தியத் திரையரங்குகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் படம் கெவின் விக்னால் எழுதிய நாவலை மையமாக வைத்து திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார் கதாநாயகன் சாம் வர்திங்டன். அசாசின் எனும் பணம் வாங்கி கொலை செய்யும் ஒரு மனிதனாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இத்திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஆக்‌ஷன்  படங்களைப் பொருத்தவரையில் துப்பாக்கியில் குறி வைப்பதும், சுடுவதும் ஓடுவதும் என பரபரப்புக்காக ஒரே மாதிரியான காட்சிகள் இருக்கும். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் உணர்வு நிலைகளை சொல்லும் படங்களில் நடித்த அனுபவம் இதுவரை எனக்கு எற்பட்டதில்லை. ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரையில் நீங்கள் புதுவகையான ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்க்கப் போகிறீர்கள்’ என்றார். 

‘நல்ல த்ரில்லர் படங்கள் என்பவை பார்வையாளர்களை இமைக்காமல் பார்க்கச் செய்துவிடும். கதைநாயகன் அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதைத் தான் நானும் செய்ய விரும்புகிறேன். பார்வையாளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுடைய எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவே திரைப்படங்களை எடுக்கப்படுகின்றன’ என்றார் இப்படத்தின் இயக்குனர் ஜொனாதன் மாஸ்டவ்.

Hunter's Prayer திரைக்கதையை எழுதியவர் ஜான் ப்ரன்காடோ, மிக்கேல் பெரிஸ், பால் லெய்டன் மற்றும் ஒரன் மூவர்மான். இதில் நடித்துள்ளவர்கள் ஆலன் லீச், ஏமி லாண்டேக்கர், மார்டின் காம்ப்ஸ்டன் மற்றும் வெரோனிகா எச்குயி ஆகியோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT