செய்திகள்

ரஜினி நடிக்கும் காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? தனுஷ் அறிவிப்பு!

தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு காலா - கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

எழில்

தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு காலா - கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று காலை இத்தகவல் வெளியிடப்பட்டது. காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28ம்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இத்தலைப்பு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறியதாவது: கரிகாலன் என்கிற பெயரின் சுருக்கமே காலா. ரஜினிக்குப் பிடித்த பெயர் என்பதால் காலா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வட்டாரங்களில் எமனை, காலா சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது காலா படம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் காலா படத்தின் முதல் பார்வை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT