செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் "காலா'

DIN

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு காலா எனப் பெயரிடப்படுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் ரஜினியின் 164-ஆவது பட போஸ்டரை படத்தின் தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் வெளியிட்டுள்ளார்.
2.0 படத்தையடுத்து பா.ரஞ்ஜித் இயக்கத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் வழங்கியிருந்தார் ரஜினி. இந்நிலையில் அப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.
நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.
ரஜினியின் 164-ஆவது படம்: படத்துக்கு கரிகாலன் என்ற சப் டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்ஜித். கபாலி பட கதாபாத்திரத்தில் ரஜினி வந்த தோற்றத்திலேயே ரஜினியின் தோற்றம் உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடைபெறவுள்ளது. வரும் 28-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT