செய்திகள்

கடன் விவகாரம்: சொத்துகளை விற்க நடிகை ராதிகாவுக்கு இடைக்காலத் தடை

DIN

அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதற்கு நடிகை ராதிகா சரக்குமாருக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் படம் தயாரிக்கப்பட்டது. இதற்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.1.5 கோடி கடனாகப் பெறப்பட்டது. இந்தப் பணத்தை கடந்த 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்தனர்.

பணத்தை கொடுக்காதபட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையைத் தருவதாகவும் இருவரும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் மற்றும் திருநெல்வேலி உள்ள சொத்துகளை அடமானமாகவும், முன் தேதியிட்டு ரூ.2 கோடிக்கு 5 காசோலைகளையும் வழங்கினர்.

இந்நிலையில், உத்தரவாதப்படி வட்டி வழங்கவில்லை. மேலும் பாம்பு சட்டை என்ற படத்தையும் வெளியிட்டுள்ளதால் தங்களுக்குத் தர வேண்டிய ரூபாயை வட்டியுடன் ரூ.3.40 கோடியைத் தர உத்தரவிட வேண்டும். மேலும், அவர்கள் வழங்கிய காசோலையும் பணம் இல்லாமல் மே முதல் வாரத்தில் திரும்பியுள்ளது. எனவே அடமானமாக வைத்த சொத்துகளை அவர்கள் விற்பனை செய்யத் தடை விதிப்பதோடு, வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டிய தொகையை உடனே வழங்க உத்தரவிட வேண்டும் என்று ராடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அடமானம் வைத்த சொத்துகளை நடிகை ராதிகா விற்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, இதுதொடர்பாக ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் ஜூன் 2-க்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT