முகப்பு
செய்திகள்

மணி ரத்னத்தின் அடுத்தப் பட கதாநாயகி ஐஸ்வர்யா ராய்?

2010-ம் வருடத்துக்குப் பிறகு எந்தவொரு தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை...

Updated On : 27 மே, 2017 at 2:55 PM
பகிர்:

ஆரம்பித்துவிட்டன, மணி ரத்னத்தின் அடுத்தப் பட செய்திகள்!

காற்று வெளியிடை வெளிவந்து சிலவாரங்களாகிவிட்ட நிலையில் உடனே மணியின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகின்றன.

விஷயம் இதுதான். மணி ரத்னத்தின் அடுத்தப் படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராவணன் படத்துக்குப் பிறகு மணி ரத்னம் படங்களில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை. அதன்பிறகு எந்திரனில் நடித்தார். 2010-ம் வருடத்துக்குப் பிறகு எந்தவொரு தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் மணி ரத்னனும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் இணைவது குறித்து பலவருடங்களாகப் பேசிவருகிறார்கள். அது தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. 

இந்தப் படத்தில், காற்று வெளியிடை படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி ராவும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. 

அதிகாரபூர்வத் தகவல்களுக்குக் காத்திருப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.