செய்திகள்

அரசியலுக்கு வருவது குறித்து நேரம் வரும்போது சொல்வேன்: ரஜினி பேட்டி

ரஜினி அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்கவுள்ளது. இதையடுத்து... 

எழில்

ரஜினி அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்கவுள்ளது. இதையடுத்து மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார் ரஜினி.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம். 

காலா படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நாளை தொடங்கவுள்ளது. இதையடுத்து மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார் ரஜினி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, காலா படப்பிடிப்புக்காக மும்பை செல்கிறேன். நடிப்பது என் தொழில். என் வேலையைச் செய்யவிடுங்கள். அரசியலுக்கு வருவது குறித்து நேரம் வரும்போது சொல்வேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT