செய்திகள்

சுவாதி கொலை வழக்கு படத்தைத் தடை செய்ய சுவாதி தந்தை புகார் மனு!

எழில்

சுவாதி கொலை வழக்கு படத்தைத் தடை செய்ய வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சுவாதி தந்தை புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-இல் மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரக் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகத்தையே மிகவும் பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கு தற்போது திரைப்படமாகியுள்ளது. சுவாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விசாரணை அதிகாரியாக அஜ்மல் நடித்துள்ளார். சுவாதியாக ஆயிராவும் ராம்குமாராக மனோ என்கிற புதுமுகமும் நடித்துள்ளார்கள். 

இந்தப் படத்தில் கற்பனையாக எந்தக் காட்சியும் சேர்க்கப்படவில்லை. நிஜ சம்பவங்களை அப்படியே படத்தில் சேர்த்துள்ளோம். மக்களுக்குத் தெரிவிக்கப்படாத பல சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன என்று இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு படத்தைத் தடை செய்ய வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சுவாதி தந்தை புகார் மனு அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT