முகப்பு
செய்திகள்

டி.ஆர். சர்ச்சையிலிருந்து மீண்டு வர ஒரு வாரமானது: நடிகை தன்ஷிகா

ஒருநாள் முழுக்க என் செல்போனை அணைத்துவிட்டேன். யாரையும் தொடர்புகொள்ள நான் விரும்பவில்லை...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

எழுத்தாளர் மீரா கதிராவன் இயக்கும் ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டி.ராஜேந்தர், தன்ஷிகாவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதையடுத்து பேச வந்த டி.ராஜேந்தர் தன்னுடைய அடுக்கு மொழியில் சபை நாகரீகம் தெரியவில்லை என நடிகை தன்ஷிகா குறித்து பேச மேடையிலேயே தன்ஷிகா சிறிது நேரம் கண் கலங்கினார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. தன்ஷிகாவைக் கண்டித்து பேசிய டி.ராஜேந்தருக்குப் பலர் கண்டனம் தெரிவித்தார்கள். தன்ஷிகாவுக்கு ஆதரவாகத் திரையுலகினர் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

இந்நிலையில் தன்ஷிகா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:

அந்தச் சம்பவத்தால் நான் மனத்தளவில் காயப்பட்டேன். அதிலிருந்து மீண்டுவர ஒருவாரமானது. ஒருநாள் முழுக்க என் செல்போனை அணைத்துவிட்டேன். யாரையும் தொடர்புகொள்ள நான் விரும்பவில்லை. சர்ச்சையை ஊதிப் பெருக்கவும் விருப்பமில்லை. என் செல்போனை ஆன் செய்தபோது, எனக்கு ஆதரவான பதிவுகளைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். அனைவருடைய ஆதரவினால்தான் நான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →