செய்திகள்

வருமான வரிச் சோதனையில் தப்புமா தனியார் தொலைக்காட்சி?

DIN

எண்பதுகளில் தூர்தர்ஷன் பரவலாக கவனம் பெற்றதைத் தொடர்ந்து தொண்ணூறுகளில் சின்னத்திரை மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்தது. தனியார் தொலைக்காட்சிகளின் வரவு, புத்தம் புதிய நிகழ்ச்சிகள், தினம்தோறும் சினிமா போன்ற புரட்சிகளால் கவரப்பட்ட மக்கள் சின்னத்திரையை வாழ்வியலுடன் ஒன்றாக்கிவிட்டனர். சமையல் அறை இல்லாத வீட்டை கூடப் பார்க்க முடியும், ஆனால் டிவி இல்லாத வீடு இருக்க முடியாது என்ற அளவுக்கு மக்களை சின்னத்திரை சிறைப்பிடித்துவிட்டது எனலாம்.  சன், விஜய், ஜெயா, ராஜ், என பல தொலைக்காட்சிகள் மக்களின் விருப்பப்பட்டியலில் என்றென்றும் இடம்பெற்றுவிட்டன.

சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக இல்லை என்றும், நிகழ்ச்சிகளில் புதுமையோ, விறுவிறுப்போ இல்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களிடையே எழுந்தது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கைப் பொறுத்தவரை ஜெயா தொலைக்காட்சிக்கு மற்ற சானல்களை விட குறைவாகவே உள்ளது. இந்நிலையில் இந்நிலையில் ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி  அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

சோதனையின் போது சேனல் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஜெயா தொலைக்காட்சியின் தற்போதைய நிலை என்ன, வருமான வரித் துறையினரிடம் ஆவணங்கள் ஏதும் சிக்கியதா, ஜெயா தொலைக்காட்சி இனி செயல்படுமா போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT