முகப்பு
செய்திகள்

முக்கியமான சமூகப் பிரச்னையை அற்புதமாக கையாண்ட படம்: அறத்திற்கு ரஜினி 'சபாஷ்'! 

முக்கியமான சமூகப் பிரச்னையைஅற்புதமாக எடுத்துக் கூறியிருக்கும் படம் என்று 'அறம்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Updated On : 14 நவம்பர், 2017 at 3:05 PM
பகிர்:

சென்னை: முக்கியமான சமூகப் பிரச்னையை அற்புதமாக எடுத்துக் கூறியிருக்கும் படம் என்று 'அறம்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்துள்ள படம் 'அறம்'. மாவட்ட ஆட்சித்தலைவராக மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ள  இந்தப்படம் விமர்சனரீதியாக பாராட்டினைப் பெற்றிருப்பதுடன் வசூல்ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

பலதரப்பிலிருந்தும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு இப்படத்தின் சிறப்புக் காட்சியினை நேற்று பிரத்யேகமாக தயாரிப்பு நிறுவனத்தினர் திரையிட்டுக் காட்டினர்.  இப்படத்தைப் பார்த்து விட்டு ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

Advertisement

முக்கியமான சமூகப் பிரச்னை ஒன்றை இப்படம் அற்புதமாக எடுத்துக் கூறியிருப்பதாக அவர் படக்குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார். ரஜினியின் பாராட்டால் மனம் நெகிழ்வடைந்த படத்தயாரிப்பு நிறுவனம் இதுபற்றிய தகவலை தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.