ஸ்ரீதேவி மகளின் அறிமுக திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி அறிமுகமாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ஆணவக் கொலைகளை எதிர்த்து வெளிவந்துள்ள படங்களில் ரசிகர்களின் மனத்தை விட்டகலாத மராத்தியப் படம் ‘சாய்ரத்’. இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் ஆகவிருக்கிறது.
சாய்ரத் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி அறிமுகமாகவுள்ளதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதனை உறுதிபடுத்தும் விதமாக ஜான்வி மற்றும் இஷான் கட்டர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதனை பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா ஃப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
Advertisement
இச்செய்தியை கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்தார். 2018-ம் ஆண்டு ஜூலை 6-ந் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக, பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் ஷாஹித் கபூரின் தம்பியும், நடிகருமான இஷான் கட்டர் நடிக்கிறார்.
தடாக் (Dhadak) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.