மாமல்லபுரத்தில் 80களின் பிரபலங்கள் கொண்டாட்டம்! (படங்கள்)
சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத் குமார், பாக்யராஜ், ஜாக்கி ஷெராப், ரேவதி, சுஹாசினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், நதியா, ராதிகா, லிசி, பூர்ணிமா பாக்யராஜ்...
80களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர்கள் சமீபகாலமாக ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடிக் கொண்டாட்டமாக இருப்பது வழக்கம்.
8-வது ஆண்டாக இந்தமுறை மாமல்லபுரத்தில் உள்ள இண்டர்காண்டினண்ட்டல் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்களும் ஊதா நிற உடையில் கலந்துகொண்டார்கள். இவர்களுடைய கொண்டாட்டம் இரண்டு நாள்களுக்கு நீடித்தது.
சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத் குமார், பாக்யராஜ், ஜாக்கி ஷெராப், ரேவதி, சுஹாசினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், நதியா, ராதிகா, லிசி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட 28 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.